பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 

பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிக் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு தற்போது வரையிலும் ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், பிற ஆண்டு மாணவர்களுக்கும் ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்படுகிறது. அதோடு, செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தக்கூடிய சூழலே தற்போது நீடிக்கிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டதை போல பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

இந்நிலையில் நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்து யாருக்கும் அச்சம் தேவையில்லை என்றும் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10, 12 ம் வகுப்பில் குறைக்கப்பட்ட பாடத்திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்

  • பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்
  • தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்
  • வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.
  • வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு.
  • ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் – பள்ளிக் கல்வித்துறை.