பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் விநியோகம்!

 

பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் விநியோகம்!

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதனை ரத்து செய்யுமாறு பல தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையிலும், கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவித்த அரசு, கொரோனா வைரஸின் அதிவேக பரவலால் ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கு என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே மீதமுள்ள 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன் படி தேர்வுகளை நடத்த அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் விநியோகம்!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று நேற்று அறிவிப்பு வெளியானதன் படி, இன்று மாலை முதல் மாணவர்கள் அவர்களது ஹால்டிக்கெட்டை https://t.co/MVvfY3GtcP என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில்லாது, பள்ளித்தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், 10ஆம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத்தேர்வுப் பணிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வுப்பணியில் முன்னுரிமை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.