பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டை நாளை முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. லிங்க் உள்ளே!

 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டை நாளை முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. லிங்க் உள்ளே!

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதிவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஒத்தி வைக்குமாறு பலர் கருத்து தெரிவித்தனர். அதனால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதே போல 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வுகளும் ஜூன் 18 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டை நாளை முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. லிங்க் உள்ளே!

இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.மாணவர்கள் அவர்களது ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம், நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனித்தேர்வர்களும் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.