சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தான் பொதுத்தேர்வா?

 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தான் பொதுத்தேர்வா?

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தான் பொதுத்தேர்வா?

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போடப்பட்டது. தற்போது நிலவும் சூழலை பொறுத்தமட்டில் அடுத்த ஆண்டு தான் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தான் பொதுத்தேர்வா?

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரையில் ஆன்லைன் வகுப்புகள் தான் நடக்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தான் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. பொதுத்தேர்வு அட்டவணையையும் தேர்வுத்துறை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது. மேலும், தேர்தல் மே மாதம் நடக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் ஜூன் மாதம் தான் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக தெரிகிறது.