நாகையில் ஆக.9 வரை கடற்கரை பகுதியில் பொதுமக்கள் கூட தடை!

 

நாகையில் ஆக.9 வரை கடற்கரை பகுதியில் பொதுமக்கள் கூட தடை!

நாகப்பட்டினம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் வரும் 9ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடுதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்கத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பொமுடக்கம் அமலில் உள்ளது. திருவிழாக்கள், மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது”.

நாகையில் ஆக.9 வரை கடற்கரை பகுதியில் பொதுமக்கள் கூட தடை!

“இந்த நிலையில், ஆக.8ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் முன்னோர்களுக்க திதி கொடுப்பதற்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் அதிகளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அதிகளவில் கூடும்பட்சத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்படும்”.

“கொரோனா மூன்றாவது அலை பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், நாகை மாவட்டத்தின் எந்த கடற்கரை பகுதிகளிலும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பொதுமக்கள் கூட தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.