காலில் விழுந்து கெஞ்சிய பப்ஜி ‘மதன்’ … முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

 

காலில் விழுந்து கெஞ்சிய பப்ஜி ‘மதன்’ … முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

தருமபுரியில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதால் அவரது முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பப்ஜி விளையாட்டை சொல்லிக் கொடுக்கும் யூடியூப் சேனலை நடத்தி வந்த மதன், அவ்வப்போது லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் பணத்தை அள்ளிக் குவித்து வந்துள்ளார். லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது அவர் சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக பேசுவதாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் 150க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தது. இதையடுத்து, பப்ஜி மதனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.

காலில் விழுந்து கெஞ்சிய பப்ஜி ‘மதன்’ … முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

இதையறிந்து தலைமறைவான மதன், போலீசாரால் தன்னை பிடிக்க முடியாது என்று சவால் விடுத்து வந்தார். கடுப்பான போலீசார், அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதன் செய்த அனைத்திற்கும் கிருத்திகா உடந்தையாக இருந்ததும் அட்மின் ஆக கிருத்திகா இருந்ததும் அம்பலமானது. கிருத்திகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தருமபுரியில் தலைமறைவாக இருந்த கைது செய்தனர்.

போலீசார் கைது செய்யும் போது, பப்ஜி மதன் போலீசார் காலில் விழுந்து தான் செய்தது தவறு தான் என்று கெஞ்சியதாக தெரிகிறது. இந்த நிலையில், மதனின் முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மதன் கைது செய்யப்பட்டதால் வழக்கை விசாரிக்க வேண்டியதில்லை என மதன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.