43 ஆண்டுகளுக்கு முந்தைய போட்டோவை பதிவிட்ட பி.டி.உஷா

 

43 ஆண்டுகளுக்கு முந்தைய போட்டோவை பதிவிட்ட பி.டி.உஷா

தடகள விளையாட்டின் முகமாக விளங்கியவர் பி.டி.உஷா. கேரளாவில் எளிமையான பொருளாதாரப் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் உஷா.

பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உஷாவுக்கு. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் தவறாமல் இவர் கலந்துகொள்வார். 13 வது வயதில் தேசிய தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று தனது வெற்றி பயணத்தைத் தொடங்கினார்.

43 ஆண்டுகளுக்கு முந்தைய போட்டோவை பதிவிட்ட பி.டி.உஷா

1980 –ல் ரஷ்யாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார். அதன்பின் தேசிய அளவில் ஏராளமான பதக்கங்கள், குவைத்தில் சாம்பியன் தடகளப் போட்டியில் 400 மீட்டரில் தங்கம் வென்றார்.

1984 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. அதில் 400 மீட்டர் ஓட்டத்தில் பல பதங்களை ஓரிரு நொடிகளில் தவறவிட்டார். ஆயினும் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டியில் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும்.

அதற்கு அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து சியோலில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும் வென்கலமும் வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் உஷா. இப்படி ஏராளமான வெற்றிக்கதைகளை உஷாவுக்குச் சொல்லிக்கொண்டே போகலாம்.

எல்லாவற்றையும் விட விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பெருமளவு கலந்துகொள்ள முன் உதாரணமாகத் திகழ்பவர் பி.டி.உஷா.

43 ஆண்டுகளுக்கு முந்தைய போட்டோவை பதிவிட்ட பி.டி.உஷா

இன்றைக்கு அவரைப் பற்றி பேச என்ன ஸ்பெஷல் தெரியுமா…

இன்று அவர், 43 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட தனது போட்டோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘1977 ஆம் ஆண்டு கேரளாவில் 9-வது கிரேடு படிக்கும்போது எடுக்கப்பட்ட படம். அப்போது 14 வயதுக்கு உட்பட்ட ஜீனியர் போட்டியில் கலந்துகொண்டேன்’ என்பதாக நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் பி.டி.உஷா

பி.டி.உஷாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.