• August
    24
    Saturday

Main Area

Main



நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த பெண்ணை கத்தியால் குத்திய சைக்கோ!! ஆஸ்திரேலியாவில் திடுக்கிடும் சம்பவம்

சம்பவம்
சம்பவம்
Loading...

நடுரோட்டில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை திடீரென கத்தியை எடுத்து குத்த முயற்சித்த சைக்கோவை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். துரதிஷ்டவசமாக பெண் ஒருவருக்கு கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது. சைக்கோவின் இந்த செயலால் சிட்னி மாநகரில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மாநகரில் பரபரப்பு நிறைந்த கிங் மற்றும் யார்க் தெருக்களில் காலை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த பெரிய கத்தி ஒன்றை எடுத்து அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களை குத்த முயற்சித்தார். 

australia

இதனை அறிந்த பொதுமக்கள் செய்வதறியாது நான்கு புறங்களிலும் ஓட்டம் பிடித்தனர். விடாது துரத்திச் சென்ற அந்த மர்மநபர் யார்க் தெருவின் முனையில் இருந்த ஹோட்டல் ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை திடீரென குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனை கண்ட இளைஞர் ஒருவர் அந்த சைக்கோவை விரட்டி பிடித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். முரண்டு குடித்தேன் அந்த சைக்கோவை காவல்துறையினர் பெல்ட் மூலம் கட்டி இழுத்துச் சென்றனர்

கத்திக்குத்து அடைந்த பெண்ணை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு காவல்துறையினர் எடுத்துச் சென்று சிகிச்சை வேற அனுமதித்தனர்.

murder

இதுகுறித்து தகவல் தெரிவித்த சிட்னி மாநகர் காவல்துறை அதிகாரி, "பொதுமக்களை அந்த மர்ம நபர் பல முறை கத்தியால் குத்த முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. துரதிஸ்டவசமாக பெண் ஒருவர் அதற்கு சிக்கியுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.  இதை செய்த சைக்கோவை விசாரணைக்கு ஈடுபடுத்தி யார் என்பதைக் கண்டறிவோம். துரத்தி பிடித்து சைக்கோவை காவல் துறைக்கு ஒப்படைத்த இளைஞருக்கு எங்களது பாராட்டுக்கள்" என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.