’மனநல ஆலோசனையே தற்கொலை எண்ணத்தை அகற்றும்’ டாக்டர் வழிகாட்டல்

 

’மனநல ஆலோசனையே தற்கொலை எண்ணத்தை அகற்றும்’ டாக்டர் வழிகாட்டல்

’தற்கொலை கோழைகளின் ஆயுதம்…’ ’தற்கொலை எதற்கு தீர்வு ஆகாது’ என்று என்னென்னவோ சொல்லலாம். ஆனால், இவையெல்லாம் தெரிந்தேதான் தற்கொலை முடிவை நோக்கிச் செல்கிறார் என்பதே உண்மை.

இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இன்று காலையில் . மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் வசித்தவர் ஜோதிஸ்ரீ நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். அவர் நிச்சயம் நீட் தேர்வில் வென்று, அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்வி படிப்பார் என்று குடும்பத்தினரால் நம்பப்பட்டது. ஆனால், தேர்வின் அழுத்தம் தாங்காமல் ஜோதிஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார்.

’மனநல ஆலோசனையே தற்கொலை எண்ணத்தை அகற்றும்’ டாக்டர் வழிகாட்டல்

தற்கொலை செய்துகொண்டவர்களுகு இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு  காரணம் இருக்கிறது. அதற்காக அப்படியே விட்டுவிடவும் முடியாது; கூடாது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜிப்மர் இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால் தற்கொலை எண்ணம் உருவாவது குறித்தும், அதை தவிர்ப்பது குறித்தும் ஆழமாகப்பேசினார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தனிமைப்படுத்தப்படுதல் குறித்த பயம் பெரும்பாலோருக்கும் இருக்கிறது.  வேலைவாய்ப்பின்மை, நிச்சயமற்ற தன்மை, நோய் குறித்து எதுவும் தெரியாத நிலை போன்ற பல விஷயங்கள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.  இவை கவனம் பெறாமல் போகும்போது தற்கொலை எண்ணம் தலையெடுக்கின்றது.  இந்தத் தருணத்தில் மன ஆலோசனை கொடுத்தால் தற்கொலைக்கு முயலும் எண்ணத்தை அகற்ற முடியும்.

’மனநல ஆலோசனையே தற்கொலை எண்ணத்தை அகற்றும்’ டாக்டர் வழிகாட்டல்

15 முதல் 35 வயது வரை ஆக்கப்பூர்வமான மற்றும் உற்பத்திக்குப் பங்காற்றுகின்ற வயதுப் பிரிவினரிடம்தான் தற்கொலை அதிகமாக உள்ளது. இந்த வயதுப் பிரிவில் புறக்கணிப்பு உணர்வு ஏற்படும். இந்தக் கொரோனா காலகட்டத்தில் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியாமலும் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாமலும் போவது மன நெருக்கடியை அதிகரிக்கின்றது. 

எனவே இந்த காலகட்டத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதலை அதிகரிக்க ஊக்குவிக்க வேண்டும், நேரிடையான சந்திப்பு முடியாதபோது தொலைபேசி, சமூக ஊடகங்கள் மூலமான தொடர்பியல் செயல்கள் அதிகரிக்கப்பட வேண்டும். தற்கொலை விகிதம்  நமது நாட்டின் வளர்ச்சி பெற்ற பிரதேசங்களில் அதிகமாக இருப்பது கவலை அளிக்கின்றது’ என்றார்.

’மனநல ஆலோசனையே தற்கொலை எண்ணத்தை அகற்றும்’ டாக்டர் வழிகாட்டல்

தற்கொலை எங்கு நடந்தாலும் நமக்கு வருத்தமே. 2018 ஆம் ஆண்டு கணக்கெடுக்கின்படி இந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் மகாராஷ்டிராவிலும், அதற்கு அடுத்த படியாக தமிழ்நாட்டிலும்தான் என்று கூருகிறது.

தமிழ்நாட்டுக்கு அடுத்தடுத்த இடங்களில், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் இருக்கின்றன.

’மனநல ஆலோசனையே தற்கொலை எண்ணத்தை அகற்றும்’ டாக்டர் வழிகாட்டல்

யூனியன் பிரதேசங்கள் எனும்போது நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் மட்டும் 2018 ஆம் ஆண்டில் 2526 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்து எனில்,  தமிழகத்திற்கு மிக அருகில் உள்ள புதுச்சேரிதான். அங்கு அதே ஆண்டில் 500 தற்கொலைகள் நடந்துள்ளன.

தற்கொலை என்பது தனிமனித முடிவாக இருந்தாலும், அம்முடிவை நோக்கித் தள்ளுவதில் சமூக, அரசியல் காரணிகள் இருக்கவே செய்கின்றன. அவற்றை எதிர்த்து குரல் கொடுப்பது, போராடுவது அவசியம் என்பதைபோல, இளைஞர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், எண்ணம் ஏற்பட்டுவிட்ட இளைஞர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது மிகவும் அவசியம்.

’மனநல ஆலோசனையே தற்கொலை எண்ணத்தை அகற்றும்’ டாக்டர் வழிகாட்டல்

ஏனெனில், சமூக, அரசியல் காரணிகள் எப்போது தீரும் என்று தெரியாது. ஆனால், நம் வீட்டு குழந்தைகளைப் பாதுகாப்பது நம் கடமை அல்லவா. குடும்ப பிரச்னைகளால் தற்கொலை முடிவை நோக்கிச் செல்வது 30.4 சதவிகிதம் என்கிறது புள்ளி விபரம். அதனால், நம் குடும்ப அமைப்பில் ஜனநாயகத் தன்மையும் உரையாடல் நேரத்தை அதிகரிப்பதும் அவசியம். எந்தக் காரணம் என்றால் தற்கொலை தீர்வு அல்ல என்பதே எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.