PSBB பள்ளி முதல்வர் இன்றும் நேரில் ஆஜராக சம்மன்!

 

PSBB பள்ளி முதல்வர் இன்றும் நேரில் ஆஜராக சம்மன்!

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாகவும் , அவர்களிடம் ஆபாசமாக பேசி புகைப்படங்களை அவர்கள் செல்போனுக்கு அனுப்பிய வந்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து அசோக் நகர் மகளிர் போலீசார் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தியதில் அவர் தனது மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாகவும், இவ்விவகாரத்தில் இன்னும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.

PSBB பள்ளி முதல்வர் இன்றும் நேரில் ஆஜராக சம்மன்!

இதைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை வருகின்ற ஜூன் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி முஹம்மத் பரூக் உத்தரவிட்டார்.

PSBB பள்ளி முதல்வர் இன்றும் நேரில் ஆஜராக சம்மன்!

இந்த சூழலில் ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நேற்று பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன் அனுப்பியது. இவர்கள் வருகின்ற ஜூன் 4 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

PSBB பள்ளி முதல்வர் இன்றும் நேரில் ஆஜராக சம்மன்!

அதேபோல் தியாகராயநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் நேற்று மூன்று மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

PSBB பள்ளி முதல்வர் இன்றும் நேரில் ஆஜராக சம்மன்!

இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் வழக்கில் பள்ளி முதல்வர் இன்றும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் காலை 11 மணிக்கு பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.