10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு! – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு! – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு என்னென்ன பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டுமோ, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “ஜூன்-11ம் தேதியன்றே விடுதிகளைத் திறப்பதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பித்திருக்கிறார். அந்த ஆணையின் அடிப்படையில் விடுதியில் தங்கி படிக்கின்ற மாணவர்கள், அந்த விடுதியிலேயே தங்கிக்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு! – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்முதல்வர் தலைமையிலான குழு முடிவு செய்து, மாணவர்களுக்கு என்னென்ன பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டுமோ, அந்த பாதுகாப்புகளை அளித்து, தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு தேவையான பேருந்து வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் தேர்வெழுதினால் போதும் என்ற முறையில், மாணவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் என்ன குறிப்பிடுகிறதோ, அதை கடைப்பிடித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.