ஜியோவை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளோம்.. பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி கொடுங்க.. விவசாயிகள் புதிய கோரிக்கை

ஜியோவை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளோம்.. பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி கொடுங்க.. விவசாயிகள் புதிய கோரிக்கை

ஜியோவை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளோம், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 3ஜி, 4ஜி வழங்குங்க என்று மத்திய அரசுக்கு டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி டெல்லியின் பல எல்லைகள் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய தயார் ஆனால் திரும்பபெற முடியாது என்று மத்திய அரசு உறுதியாக சொல்லி விட்டது. ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பபெறவில்லை என்றால் போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம் என்று விவசாயிகள் உறுதியாக சொல்கின்றனர்.

ஜியோவை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளோம்.. பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி கொடுங்க.. விவசாயிகள் புதிய கோரிக்கை
ராகேஷ் டிக்கைட்

இந்த சூழ்நிலையில் பாரதிய கிசான் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு அளித்த முன்மொழிதலில், திருத்தங்கள் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, சட்டங்களை திரும்பபெறுவது குறித்து சொல்லபடவில்லை. எங்களுக்கு சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். சட்டங்கள் திரும்ப பெற்றால் மட்டுமே எங்கள் போராட்டம் முடிவுக்கு வரும்.

ஜியோவை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளோம்.. பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி கொடுங்க.. விவசாயிகள் புதிய கோரிக்கை
பி.எஸ்.என்.எல்.

அரசாங்கம் 3 சட்டங்களை கொண்டு வந்தது போல் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் ஒரு மசோதா கொண்டு வர வேண்டும். நாங்கள் அரசாங்கம் அழைக்கும் போதெல்லாம் நாங்கள் அவர்களுடன் பேசுவோம். ஜியோவை புறக்கணிக்க நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். நாங்கள் பி.எஸ்.என்.எல்.-ஐ பயன்படுத்த விரும்புகிறோம். பி.எஸ்.என்.எல்.-ல் 3ஜி, 4ஜி ஆகியவற்றை அரசாங்கம் கொண்டு வர வேண்டும். நீங்கள் மற்ற (தனியார்) நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்தால் நாடு நஷ்டத்தை சந்திக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.