• February
    17
    Monday

Main Area

Main



காதலர் தினத்தை எங்க பகுதிக்கு வந்து எங்களோடு கொண்டாடுங்க! பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பொதுமக்களின் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லி ஷாஹீன் பாக்கில் பெண்கள் உள்பட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் வீதியில் அமர்ந்து போராடி வருகின்றனர். கிட்டத்தட்ட 2 மாதங்களாக இந்த போராட்டம் நடந்து வருகிறது.

ஷாஹீன் பாக் போராட்டம்

இந்நிலையில், போராட்டம் நடக்கும் பகுதிக்கு வந்து காதலர் தினத்தை கொண்டாடுமாறு பிரதமர் மோடிக்கு ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ள போஸ்டர் வைரலாகி உள்ளது. அந்த போஸ்டரில், இந்த காதலர் தினத்தில், பிரதமர் ஷாஹீன் பாக் வந்து அன்பின் பண்டிகையை கொண்டாடுமாறு ஷாஹீன் பாக் மக்கள் மனமார்ந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

வைரலாகி வரும் போஸ்டர்

பிரதமர் மோடிக்காக ஒரு லவ் சாங் வெளியிடுவோம் மற்றும் ஆச்சிரியமான காதலர் தின பரிசும் உண்டு. பிரதமர் மோடி, தயவு செய்து ஷாஹீன் பாக் வாருங்கள், உங்களது பரிசை பெற்று கொள்ளுங்கள் மற்றும் எங்களிடம் பேசுங்கள் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தென்கிழக்கு டெல்லியில் மட்டுமல்லாது, சமூக ஊடக தளங்களிலும் பரவலாக பரப்பப்படுகிறது.
 

2018 TopTamilNews. All rights reserved.