இபாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி வலுக்கும் போராட்டம்!

 

இபாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி வலுக்கும் போராட்டம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், இபாஸ் முறை தொடரும் என அரசு அறிவித்தது. அதனை நீக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், மக்களின் நலன் கருதி அதனை தகர்க்க முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்து விட்டார். ஆனால், அத்தியாவசிய காரணங்களுக்கு கூட இபாஸ் கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், இபாஸ் முறையில் தளர்வுகள் அளிப்பதாக முதல்வர் அறிவித்தார். அதாவது, விண்ணப்பித்த எல்லாருக்குமே உடனடியாக பாஸ் கிடைக்கும் என்றும் ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்று இருந்தால் போதும் என்றும் தெரிவித்தார்.

இபாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி வலுக்கும் போராட்டம்!

அதன் படி தற்போது விண்ணப்பித்த எல்லாருக்கும் இபாஸ் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் சொந்த ஊர்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அதே போல சென்னையில் அப்ளை செய்த உடன், ஆட்டோமேட்டிக் ஆக இபாஸ் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இ பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றே பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இ பாஸை ரத்து செய்யக்கோரி சுற்றுலா வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் ஆம்பூர், வேதாரண்யத்திலும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.