வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்; சீர்காழியில் 100க்கும் மேற்பட்டோர் கைது!

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்; சீர்காழியில் 100க்கும் மேற்பட்டோர் கைது!

சீர்காழி அருகே மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

அண்மையில் மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண்துறை தொடர்பான 3 மசோதாக்கள், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு சட்டம் ஆக்கப்பட்டது. இந்த புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையையே செய்யும் என மத்திய அரசு தெரிவிக்கிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்; சீர்காழியில் 100க்கும் மேற்பட்டோர் கைது!

இந்த சட்டங்களுக்கு தமிழக அரசும் வரவேற்பு அளிக்கும் நிலையில், இதனை எதிர்த்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் அதிகார அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேளாண் சட்ட நகலை எரித்து மறியலிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.