’8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக திமுக எம்பி யிடம் மனு’ களத்தில் இறங்கிய எதிர்ப்பு இயக்கத்தினர்

’8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக திமுக எம்பி யிடம் மனு’ களத்தில் இறங்கிய எதிர்ப்பு இயக்கத்தினர்

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்திற்கு பொதுமக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்; போராட்டக் களத்திலும் குதித்தனர்.

’8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக திமுக எம்பி யிடம் மனு’ களத்தில் இறங்கிய எதிர்ப்பு இயக்கத்தினர்

இதற்கான எதிர்ப்பு போராட்டம் பல இடங்களில் நடந்தது. நிலத்தில் கல் பதிக்கக்கூடாது என துணிவோடு நின்ற மூதாட்டியின் படம் எல்லோரையும் அசைத்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வளர்மதி, எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்திற்கு துண்டறிக்கை வழங்கினார் என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

எட்டு வழிச்சாலைக்கு சுற்றுச்சுழல் அனுமதி வேண்டும் என்பது முந்தைய நிலை. அதை மாற்றி, இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

’8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக திமுக எம்பி யிடம் மனு’ களத்தில் இறங்கிய எதிர்ப்பு இயக்கத்தினர்

இந்நிலையில் எட்டு வழிச்சாலை அறிவிக்கப்பட்டபோது உருவாக்கப்பட்ட எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழனிசாமி, வேலு உள்ளிட்டோர் தரும்புரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரைச் சந்தித்து இந்தத் திட்டத்தை நிறுத்த முயற்சி எடுக்குமாறு மனு அளித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவலாக அதிகரித்து வரும் சூழலில் புதிய கல்விக் கொள்கைக்கு அனுமதி, எட்டு வழிச்சாலைக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை போன்ற அறிவிப்புகள் மூலம் இதற்கான விவாதங்களை மீண்டும் கிளப்பி உள்ளது.