கருந்திரிகளை பறிமுதல் செய்ய எதிர்ப்பு: விருதுநகர் அருகே பெண்கள் போராட்டம்!

 

கருந்திரிகளை பறிமுதல் செய்ய எதிர்ப்பு: விருதுநகர் அருகே பெண்கள் போராட்டம்!

வீட்டில் தயாரிக்கப்படும் கருந்திரியை போலீசார் பறிமுதல் செய்ததால் அருப்புக்கோட்டையில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் அதிகமாக இருப்பதால், அப்பகுதிவாழ் மக்கள் பெரும்பாலானோர் பட்டாசு தயாரிக்கும் பணிகளையே தொழிலாக செய்து வருகின்றனர். ஆனால் அனுமதி பெறாமல் வீடுகளில், பாட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தும் பொருளான கருந்திரியை தயாரிக்கவோ, பதுக்கவோ கூடாது. இருப்பினும் விருதுநகர் மாவட்டத்தின் பல இடங்களில் கருந்திரி தயாரிக்கப்படுவதை அறிந்த போலீசார், அதனை பறிமுதல் செய்து வருகின்றனர். இதே போல அருப்புக்கோட்டையில் 50,000 குரோஸ் கருந்திரி தயாரிக்கப்படுவது அதிகாரிகளின் கவனத்துக்கு எட்டியதால், அதனை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருந்திரிகளை பறிமுதல் செய்ய எதிர்ப்பு: விருதுநகர் அருகே பெண்கள் போராட்டம்!

இந்த நிலையில் கருந்திரிக்களை வீடு வீடாக புகுந்து போலீசார் பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தெற்குத்தெரு, மேட்டுத்தெரு பகுதிகளில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்ய வந்த போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பறிமுதல் செய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.