சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்

சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்

இந்நிலையில் சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதற்கான தடையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கொரோனா பரவல் காரணமாக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.