‘விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி’ அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

‘விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி’ அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை உரிய நேரத்தில் திறக்காததால், நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைத்து விட்டது. இதனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அமமுக சார்பில் நவ.2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

‘விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி’ அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் உரிய நேரத்தில் தமிழக அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த சில நாட்களாக மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன. மிகுந்த இன்னல்களுக்கிடையே பாடுபட்டு விளைவித்த நெல்லினை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பழனிசாமி அரசு செயல்பட வேண்டும் என ஏற்கனவே கழகத்தின் சார்பில் வலியுறுத்தி இருந்தோம்.

‘விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி’ அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

ஆனாலும் அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை மூடி மறைத்து பேட்டிகளை கொடுப்பதிலேயே முதலமைச்சரும் உணவு துறை அமைச்சரும் ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே டெல்டா விவசாயிகளின் துயரத்தை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதற்காக, கழகத்தின் சார்பில் திருவையாறு, தேரடியில் வருகிற 2.11.2020 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.