யாதவ சமுதாயத்தினரை இழிவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து போராட்டம்

 

யாதவ சமுதாயத்தினரை இழிவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து போராட்டம்

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே யாதவ சமுதாயத்தினரை இழிவாக பேசியதாக அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 2021 ஆம் ஆண்டு தேர்தலில் யாதவர் வாக்கு அதிமுகவுக்கு கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மதுரையில் நடந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு சமூகத்தினர் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தமிழ்நாடு யாதவர் அமைப்பை சேர்ந்தவர்கள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாதவ சமுதாயத்தினரை இழிவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து போராட்டம்

இதன் ஒரு பகுதியாக அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் தலைமையில் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களைஎழுப்பினர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, மதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் பகுதியில் இருந்து வந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

அமைச்சர் செல்லூர் ராஜு பொது வழியில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தில் தலையிட்டு செல்லூர் ராஜை பதவியிலிருந்து நீக்க வேண்டும். அதை செய்யத் தவறினால் போராட்டம் தொடரும் பட்சத்தில் வருகிற 2021ம் ஆண்டு தேர்தலில் யாதவ சமுதாய வாக்குகள் அதிமுகவிற்கு கிடையாது எனவும் போராட்டக்காரர்கள் எச்சரித்தனர்.

முன்னதாக இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, “நான் சாதி, மதம் பார்ப்பதில்லை. தேர்தல் நேரத்தில் எனக்குச் சாதி சாயம் பூச வேண்டாம். அப்படிப் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்தார்.