• July
    23
    Tuesday

Main Area

Main



அடுத்தடுத்து 3 பள்ளிகளில் சிறைவைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்!

Free Laptop
Free Laptop
Loading...

பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஈரோடு, கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிக்கூடங்களில் அடுத்தடுத்து நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கினார்கள்.

Mahalingam - Thennarasu

முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள மடிக்கணினிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் அளித்த பதில் திருப்தியாக இல்லை என்று மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதே நிலை அடுத்த இரண்டு பள்ளிகளிலும் ஆர்டர் பிசகாமல் நடந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் விழா முடிந்து எம்.எல்.ஏ.க்கள் இருவரும் காரில் கிளம்பி செல்ல முயன்றபோது மாணவிகள் காரை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். மாணவர்களில் மற்றொரு பிரிவினர் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களுக்கு முன்பு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ.க்கள் வெளியே செல்ல முடியாமல் சிறை பிடிக்கப்பட்டு, அதிகாரிகள் தலையீட்டின்பேரில் விடுவிக்கப்பட்டனர்.

Erode Protest

வீரப்பன்சத்திரத்தில் மாணவ-மாணவிகள் நடத்திய சாலை மறியல் போராட்டம் பகல் 12.45 மணி முதல் 2.15 மணி வரை நீடித்தது. போராட்டம் தொடர்ந்ததையடுத்து, கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்த மாணவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். போராட்டம் நடத்திய 33 பெண்கள் உள்பட 58 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

2018 TopTamilNews. All rights reserved.