வாயிலேயே வடை சுடும் பிரதமருக்கு பார்சல் வடை அனுப்பும் போராட்டம்

 

வாயிலேயே வடை சுடும் பிரதமருக்கு பார்சல் வடை அனுப்பும் போராட்டம்

தமிழ்நாட்டிற்கு போதிய தடுப்பூசிகளை வழங்காமல், கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாக பேசிவரும் பிரதமருக்கு பார்சல் வடை அனுப்பும் நூதன போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

வாயிலேயே வடை சுடும் பிரதமருக்கு பார்சல் வடை அனுப்பும் போராட்டம்

நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை விரைவில் தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில், தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,
தமிழ்நாட்டிற்கு போதிய தடுப்பூசிகள் வழங்காமல் பாகுபாடு காட்டும் மத்திய அரசையும், பிரதமரையும் கண்டித்து சென்னை கிண்டியில் இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சிறுவர்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்று பிரதமருக்கு மெது வடையை பார்சல் அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேட்டியளித்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற தலைவர் பாரதி, தமிழ்நாட்டிற்கு போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை எனவும், இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தி முடிக்க நான்கு ஆண்டுகள் ஆகும் எனக் கூறினார். தடுப்பூசிகளை வழங்காமல் மான்கி பாத் நிகழ்ச்சியில் இலவசமாக தடுப்பூசி தருகிறோம், கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம் என பிரதமர் வாயிலே வடை சுடுவதாகவும், இதனை கண்டித்து பார்சலில் மெதுவடை அனுப்பும் நூநன போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தி மேற்கொள்ள விரைந்து அனுமதிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.