ஈரோடு-டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; கலெக்டர் அலுவலகத்தில் மனு

 

ஈரோடு-டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஈரோடு, செப் 4

ஈரோடு பெரிய சடையம்பாளையம் பகுதி மக்கள் மற்றும் ஸ்ரீபாலாஜி கார்டன் மற்றும் பாலாஜி கார்டன் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர்.

ஈரோடு-டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; கலெக்டர் அலுவலகத்தில் மனு

அவர்கள் மனுவில் கூறியதாவது; ஈரோடு பெரிய சடையம்பாளையம, இரணியன் வீதி எஸ்.பி. எஸ் ரைஸ் மில் ரோடு அருகே ஸ்ரீ பாலாஜி கார்டன்,பாலாஜி கார்டன் பெரிய சடையும் பாளையம் கிராமம் அமைந்துள்ளன. இப்பகுதி முழுவதும் விவசாய நிலத்தை சார்ந்து உள்ளது. இங்குள்ள விவசாய நிலங்களில் ஒரு சில பகுதிகள் வீட்டு மனையாக மாற்றப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு, குடியிருப்பு பகுதியாக மாறி வருகிறது. ஸ்ரீ பாலாஜி கார்டன், பாலாஜி கார்டன் மற்றும் பெரிய சடையம்பாளையம் பகுதியில் 400க்கும்

ஈரோடு-டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; கலெக்டர் அலுவலகத்தில் மனு

மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். இதேபோல், பெண் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். எனவே இந்த பகுதி பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும் வாகனங்கள் அதிகமாக சொல்லும் பகுதியாக உள்ளது. மாலை நேரங்களில் சிறியவர்கள், முதியவர்கள் நடைபயிற்சி செய்தும் வருகின்றனர். எங்க ள்பகுதியில் ஒரு விவசாய நிலத்தின் உரிமையாளர்கள், அவர்களுக்கு சொந்தமான இடத்தில் குடோன் கட்டி டாஸ்மாக் மது கடையை வாடகைக்கு விட முயற்சி செய்து வருகின்றனர் .

ஈரோடு-டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; கலெக்டர் அலுவலகத்தில் மனு

குடியிருப்பு பகுதிகள் நிறைந்துள்ள இந்த இடத்தில் டாஸ்மாக் கடை வந்தால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண்கள் முதியோர் களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும.் மேலும் விவசாய பணிகள் செய்வதற்கும் இடையூறாக இருக்கும். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். செய்தி;அமுதினி