‘புதுச்சேரிக்கு ஒருரூபாய்கூட கொரோனா நிதியாக மத்திய அரசு கொடுக்கவில்லை’ தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம்!

‘புதுச்சேரிக்கு ஒரு ரூபாய்கூட நிதியாக மத்திய அரசு கொடுக்க வில்லை’ கண்டித்து தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம்!

கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவிலும் கடும் வேகத்துடன் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி அளித்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி புறக்கணிப்பட்டிருப்பதாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் இன்று போராட்டம் நடத்துகிறது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், “புதுச்சேரி மாநிலத்தை விட குறைவான மக்கள் தொகையும், பாதிப்பு எண்ணிக்கையும் கொண்ட மிசோரம் போன்ற மாநிலங்களுக்குக் கூட 30 கோடி ரூபாய் – கொரோனா பேரிடர் நிதி வழங்கியுள்ள இந்திய அரசே, இந்த நிமிடம் வரை புதுச்சேரிக்கு, ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் வேடிக்கைப் பார்க்கிறது.

இப்போது, புதுச்சேரியின் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 402 ஆக உள்ளது. 9 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இது இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சமுள்ளது. மொத்தமாகவே இங்கு அரசு மருத்துவமனைகளில் 50 வெண்டிலேட்டர்கள்தான் இருக்கின்றன. நாளை நிலைமை கைமீறினால் என்ன செய்வது? புதுச்சேரியின் அரசு மருத்துவமனைகளில் கபசுரக் குடிநீர் கூட வழங்கப்படுவதில்லை!

எனவே, புதுச்சேரிக்கு உடனே நிதி ஒதுக்கக் கோரி நாளை (25.06.2020) காலை 10 மணிக்கு புதுச்சேரி – காந்தி வீதி – அமுதசுரபி சந்திப்பில் கறுப்புக் கொடியுடன் கண்டனப் போராட்டம் நடத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

குடிமக்களை பாதுகாப்பதில் எடியூரப்பா அரசு தோற்று விட்டது… கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

கர்நாடகாவில் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதில் தோற்று விட்டது என அம்மாநில முன்னாள் முதல்வரும், மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டியுள்ளார்....

நஷ்டம்… நஷ்டம்.. சோகத்தில் வோடாபோன் ஐடியா….

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் வோடாபோன் ஐடியா நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.11,643.5 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது....

சீன நிறுவனங்களுக்கு ஆதரவா செயல்பட்டேனா? பா.ஜ.க. தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய கமல் நாத்

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருகிறது மேலும், கடந்த மாதம் 15ம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற...

30 நாளில் 4.50 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் காலி…. ஹீரோ மோட்டோகார்ப் தகவல்

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 4.50 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின்...
Open

ttn

Close