“நீங்க போராட வேண்டியது கோயில்களுக்காக அல்ல; கொரோனாவுக்கு எதிராக” – பாஜகவினரை கலாய்த்த உத்தவ் தாக்கரே!

“நீங்க போராட வேண்டியது கோயில்களுக்காக அல்ல; கொரோனாவுக்கு எதிராக” – பாஜகவினரை கலாய்த்த உத்தவ் தாக்கரே!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்தாலும் கேரளா, மகாராஷ்டிரா போன்ற ஒருசில மாநிலங்களில் திடீரென்று அதிகரித்து வருகிறது. கேரளாவில் ஓணம் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதற்குப் பிறகே அங்கே கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷன், உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா ஆகியோர் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேச செயலர்களுடன் உயர்நிலைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

“நீங்க போராட வேண்டியது கோயில்களுக்காக அல்ல; கொரோனாவுக்கு எதிராக” – பாஜகவினரை கலாய்த்த உத்தவ் தாக்கரே!

இக்கூட்டத்தில் கேரளாவில் ஓணம் திருவிழாவுக்குப் பின் அதிகரித்துள்ள கொரோனா தொற்றை சுட்டிக்காட்டி, மற்ற மாநிலங்கள் திருவிழாக்களில் அதிக தளர்வுகளை அளிக்காமல் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கடிதமும் அனுப்பப்பட்டது. தனிமனித இடைவெளியையும் முக கவசம் அணிந்து வெளியே செல்ல அறிவுறுத்த வேண்டும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விரைந்து அதிகப்படுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“நீங்க போராட வேண்டியது கோயில்களுக்காக அல்ல; கொரோனாவுக்கு எதிராக” – பாஜகவினரை கலாய்த்த உத்தவ் தாக்கரே!

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்துள்ளன. ஆமால் பாஜக கட்சியினர் அரசுகளைக் கண்டித்து போரட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதற்கு அப்போதே பதிலடி கொடுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரி எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதனால்தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை என அறிவித்துள்ளோம். போராட்டம் நடத்தும் பாஜகவினரிடம் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை காட்டவா?” என்று கூறினார்.

“நீங்க போராட வேண்டியது கோயில்களுக்காக அல்ல; கொரோனாவுக்கு எதிராக” – பாஜகவினரை கலாய்த்த உத்தவ் தாக்கரே!

இதேபோல மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கக் கோரி பாஜகவினரும் ஒருசில மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டித்துப் பேசியுள்ள உத்தவ் தாக்கரே, “கொரோனா குறைந்த பின்பு கோயில்களைத் திறப்பது குறித்து அரசு பரிசீலிக்கும். கோயில்களைத் திறக்கக் கோரி போராடுவதற்குப் பதில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுங்கள். விரைவில் கோயில்களைத் திறந்துவிடலாம். வழிபாட்டுத் தலங்களை நாம் திறந்தால் நிலைமை கைமீறி போய்விடும். பின்னர் மீண்டும் மூட வேண்டிய சூழல் ஏற்படும். ஆகவே அனைவரும் பொறுமையுடன் காத்திருங்கள்” என்றார்.