மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் – 5 ஆண்கள் கைது, 10 பெண்கள் மீட்பு

மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் –  5 ஆண்கள் கைது,  10 பெண்கள் மீட்பு

திருச்சியில் மசாஜ் சென்டர் பெயரில், பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 5 ஆண்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் –  5 ஆண்கள் கைது,  10 பெண்கள் மீட்பு

திருச்சி மாநகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து, சிலர் விபசாரத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் –  5 ஆண்கள் கைது,  10 பெண்கள் மீட்பு

இந்த நிலையில், தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தர்ஷினி ஆயுர்வேதிக் ஸ்பா என்ற பெயரில் கருமண்டபத்திலும், ஆரஞ்சு சபா என்ற பெயரில் பொன்நகரிலும், ஹெவன் லி சபா என்ற பெயரில் எல்ஐசி காலனியிலும், திவ்யம் ஆயுர்வேதிக் ஸ்பா என்ற பெயரில் வில்லியம்ஸ் ரோடு ஆகிய இடங்களில் பெண் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் திடீர் சோதனை செய்தனர்.

மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் –  5 ஆண்கள் கைது,  10 பெண்கள் மீட்பு
மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் –  5 ஆண்கள் கைது,  10 பெண்கள் மீட்பு

அப்போது, தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கண்மணி முருகன், திருச்சி பெரிய கடை வீதியை சேர்ந்த தர்மேந்திரா, திருச்சி வையம்பட்டி சேர்ந்த கோபிநாத், திருச்சி திருவரம்பூர் சேர்ந்த பிரவீன், திருச்சி லால்குடி சேர்ந்த அஜித் ஆகிய 5 பேர், ஸ்பா மையம் என்கிற பெயரில் விபசாரம் மையம் நடத்தியது தெரிய வந்தது. ஸ்பா மையம் என்ற பெயரில் , ஏழைப் பெண்களுக்கு வேலை அளிப்பதாக கூறி 10 பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் –  5 ஆண்கள் கைது,  10 பெண்கள் மீட்பு

இதையடுத்து, விபசாரத் தடுப்பு பிரிவின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்து 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த மசாஜ் செண்டர்களில் வேலை செய்த ,பாதிக்கப்பட்ட 10 பெண்களை மீட்டு அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் –  5 ஆண்கள் கைது,  10 பெண்கள் மீட்பு