கொரோனா காலத்தில் ரூ.4 கோடி சொத்து : குட்காவை கள்ளசந்தையில் விற்றது அம்பலம்!

 

கொரோனா காலத்தில் ரூ.4 கோடி சொத்து : குட்காவை கள்ளசந்தையில் விற்றது அம்பலம்!

கடலூரில் கேஎம் பேட்டை பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலூர் டிஎஸ்பி சாந்தி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டை சுற்றி வளைத்து உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தியதில் சுமார் 8 டன் குட்கா பொருட்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு ஒன்றரை கோடி என்பதும் தெரியவந்தது.

கொரோனா காலத்தில் ரூ.4 கோடி சொத்து : குட்காவை கள்ளசந்தையில் விற்றது அம்பலம்!

இந்த விவகாரத்தில் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்திய ஆய்வில் 100 சவரன் நகை மற்றும் கட்டு கட்டாக பணம், 4 கோடி ரூபாய்க்கு வாங்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த குட்கா பொருட்களை கள்ள சந்தையில் விற்று லாபம் சேர்த்த பாரதி இந்தகொரோனா காலத்தில் மட்டும் சுமார் 4 கோடிக்கு சொத்து வாங்கி இருப்பது போலீசார் மத்தியிலேயே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

கொரோனா காலத்தில் ரூ.4 கோடி சொத்து : குட்காவை கள்ளசந்தையில் விற்றது அம்பலம்!

இதுகுறித்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர். பாரதி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் நகைகள் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறைக்கு பரிந்துரை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்