சொத்து வரி – நெட்டிசன்களின் கேள்விகள் !

 

சொத்து வரி – நெட்டிசன்களின் கேள்விகள்  !

ஊரடங்கு காலத்தில் தனது கல்யாண மண்டபத்துக்கு வருமானம் இல்லை என்பதால், சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் நீதிமன்றத்தை நாடிய விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நீதிபதிகள் கண்டனத்தை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதன்பின்னர் சொத்து வரி நிலுவையை ரஜினிகாந்த் செலுத்தி விட்டார்.

சொத்து வரி – நெட்டிசன்களின் கேள்விகள்  !

இந்த நிலையில், சொத்துவரி என்பது வேறு, வருமான வரி அல்லது சேவை வரி என்பது வேறு என நெட்டிசன்களை ஏகத்துக்கும் புள்ளிவிவரங்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

கல்யாண மண்டபம் வாடகைக்கு விடப்படுகிறது. அதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானத்துக்கு வரி செலுத்தப்பட வேண்டும். லாக்டவுன் காரணமாக வருமானமே இல்லை என்றால், வருமான வரி கிடையாது. கல்யாண மண்டபம் ஒரு சேவை வழங்குகிறது. அந்த சேவைக்கு கட்டணம் கிடைக்கிறது. அதற்கு சேவை வரி செலுத்தலாம். லாக் டவுன் காரணமாக சேவையே வழங்கப்படவில்லை, எனவே வருவாய் இல்லை, எனவே சேவை வரி செலுத்தத் தேவையில்லை.

ஆனால், சொத்து வரி என்பது அப்படியல்ல. சொத்தின் வருவாய் எவ்வளவு கிடைக்கக்கூடும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் சொத்துவரி கணக்கிடப்படும். சொத்து என்பது நிலையானது. வருவாயே இல்லாவிட்டாலும் சொத்துவரி உண்டு. உதாரணமாக, ஒரு வீடு இருக்கிறது. அதில் குடியிருக்கிறார்கள் அல்லது வாடகைக்கு விடுகிறார்கள் என்றாலும் அல்லது பூட்டியே வைத்திருக்கிறேன் என்றாலும் சொத்து வரி உண்டு.

சொத்து வரி – நெட்டிசன்களின் கேள்விகள்  !

சொத்துவரியைக் கொண்டுதான், அந்தப் பகுதிக்கான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட குடிமை வசதிகள் தரப்படுகின்றன. வீட்டில் நீங்கள் குடியிருந்தாலும் சரி, வாடகைக்கு விட்டிருந்தாலும் சரி, சும்மா பூட்டி வைத்திருந்தாலும் சரி, அந்தப் பகுதிக்கு இந்தச் சேவைகள் எல்லாம் கிடைத்தாக வேண்டும்.

எந்தெந்த வீட்டில் ஆள் இல்லை, எந்தெந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள் என்று பார்த்துப் பார்த்து, பயன்படுத்தப்படும் காலத்துக்கு மட்டும் சொத்து வரி விதிக்க முடியாது. அப்படிச் செய்வதாக இருந்தால், நம் மக்கள் அதிலும் பெரிய வேலையைக் காட்டி விடுவார்கள். வரிக்கணக்கு எடுக்க வரும்போது வீட்டைப் பூட்டி வைத்துவிட்டு, இங்கே யாரும் இல்லை, அதனால் சொத்துவரி கூடாது என்று சொல்லி விடுவார்கள்.

வருவாய் இருந்தால்தான் சொத்துவரி கட்டுவேன் என்றால், சில மாதங்களில் ஏகத்துக்கு புக்கிங் ஆகி, செம்மையாக கல்லா கட்டும்போது கூடுதலாக சொத்துவரி கட்டுகிறாரா? இல்லைதானே?
அதனால்தான் சொத்துவரி என்பது, அந்தந்தப் பகுதியின் மனை விலை மதிப்பு, கட்டுமானம், அதன் வருவாய் ஆகிய பல விஷயங்களின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது. அதற்கென்று ஒரு கணக்கு இருப்பதாக கூறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில் சென்னையில் சொத்துவரி அதிகரிக்கப்படவே இல்லை என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.சொத்துவரியை அதிகரிப்பது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் 2017 லேயே கண்டித்துள்ளது.

சொத்து வரி – நெட்டிசன்களின் கேள்விகள்  !

ரஜினியை பார்த்து ஆளாளுக்கு சொத்துவரி விலக்கு அளிக்க வேண்டும் என கிளம்பினால், அரசுக்கு வருவாய்தான் ஏது ? என கேள்வி எழுப்பி வருகின்றனர். நல்லவேளை ரஜினி தாக்கல் செய்த சொத்துவரி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தால், தங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என மளமளவென வழக்குகள் குவிந்திருக்கும் என்றும் நெட்டிசன்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.