போதைபொருள் போலீசின் கண்காணிப்பில் திரையுலகமும் ,இசையுலகமும் -ரஹ்மானிடம் விசாரணை

 

போதைபொருள் போலீசின் கண்காணிப்பில் திரையுலகமும் ,இசையுலகமும் -ரஹ்மானிடம் விசாரணை

இப்போது திரையுலகில் பல நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் போதை மாத்திரைகளுக்கு அடிமையாகியுள்ளதால் அவர்களில் பலர் போதை பொருள் போலீசின் கண்காணிப்பில் உள்ளனர் என்ற அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது .

ஆகஸ்டு மாதம் 21ம் தேதியன்று இரவு கன்னட திரையுலகை சேர்ந்த இசையமைப்பாளர்கள் ,மற்றும் பல நடிகர்கள் கலந்து கொண்ட பெங்களூருவில் உள்ள ஒரு மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் போதை பொருள் போலிஸார் நடத்திய சோதனையில் 145 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளும் .2லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்துடன் கூடிய ஒரு பெட்டியை கைப்பற்றி நடத்திய விசாரணையில், அது பல கன்னட திரையுலக நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு கொண்டு வரப்பட்டதை கண்டுப்பிடித்தனர் .
பிறகு போலீசார் பலரின் வீடுகளில் சோதனை நடத்தி 96 எம்டிஎம்எ போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர் .இந்த போதை மாத்திரைகளை அவர்களுக்கு வழங்கிய ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர் .இந்த மாத்திரையின் விலை ஒன்று 2000 ரூபாய்க்கு மேல் விற்க்கப்டுகிறது .இதை உட்கொண்டால் பரவசநிலையை எட்டவைப்பதோடு ,கடுமையான் போதையையும் உண்டாக்கும் .இதை வெளிநாடு களிலிருந்து தருவிக்கப்ட்டு இங்கு பல பணக்காரர்களுக்கும் ,கல்லூரி மாணவர்களுக்கும் விற்கப்டுகிறது .
இந்த மாத்திரைகளை பல பணக்கார புள்ளிகளுக்கு ரெகுலராக வழங்கிய ரஹ்மான் என்ற போதை பொருள் விற்பனையாளரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர் .இவரிடம் நடத்திய விசாரணையில் கன்னட திரையுலகினர் பலர் இந்த போதை மாத்திரையில் தள்ளாடி வரும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

போதைபொருள் போலீசின் கண்காணிப்பில் திரையுலகமும் ,இசையுலகமும் -ரஹ்மானிடம் விசாரணை