அமெரிக்க ஷேர் மார்க்கெட்டில் ரஜினியின் “சூப்பர் ஸ்டார்” அடைமொழி – ஃபிரஸ்வொர்க்ஸ் நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்!

 

அமெரிக்க ஷேர் மார்க்கெட்டில் ரஜினியின் “சூப்பர் ஸ்டார்” அடைமொழி – ஃபிரஸ்வொர்க்ஸ் நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரின் மென்பொருள் சேவை நிறுவனமான ஃபிரஸ்வொர்க்ஸ் தனது பங்குகளை விற்கும் திட்டத்திற்கு உலகப் பிரபலமான ரஜினியின் அடைமொழி “சூப்பர் ஸ்டார்” என பெயரிட்டுள்ளது. இந்தச் செய்தி தான் கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் சூப்பர் ஸ்டார் எங்கள் தலைவன் ரஜினி என அவரின் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாக்கி விட்டனர். 2010ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் என்பவரும் ஷான் கிருஷ்ணசாமி என்பவரும் சென்னையில் ஃபிரஸ்டெஸ்க் என்ற மென்பொருள் சேவை நிறுவனத்தை தொடங்கினர்.

அமெரிக்க ஷேர் மார்க்கெட்டில் ரஜினியின் “சூப்பர் ஸ்டார்” அடைமொழி – ஃபிரஸ்வொர்க்ஸ் நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்!

குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியடைந்த இந்நிறுவனத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதனால் நிறுவனத்தின் வளர்ச்சியை கருதி, ஃபிரஸ்வொர்க்ஸ் என்று பெயரை மாற்றி அமெரிக்காவின் சிலிக்கான் வேலிக்கு சென்றது. 2018ஆம் ஆண்டு முதல் அங்கே தனது சேவையைத் தொடங்கி நடத்தி வருகிறது. தற்போது இந்நிறுவனம அமெரிக்க பங்குச்சந்தையில் பங்குகளை விற்பனை மூலம் (Freshworks IPO) நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. பங்குகள் திரட்டும் புதிய திட்டத்திற்கு அந்நிறுவனம் சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைத்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை அதன் நிறுவனர் மாத்ருபூதமே விளக்கியுள்ளார்.

Freshworks strengthens top management with four new appointments | Business  Standard News

கிரிஷ் மாத்ருபூதம் கூறுகையில், “பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்திற்கு சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைத்ததன் மூலம் என்னுடைய மானசீக குருவான ரஜினி சாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் மீது எனக்கு உள்ள அன்பை வெளிப்படுத்தும் நோக்கத்திலேயே சூப்பர் ஸ்டார் என பெயர் வைக்க விரும்பினேன். எனக்கு எப்போதுமே ரஜினி சார் தான் வாழும் ரோல்மாடல். சூப்பர் ஸ்டாரை உலகெங்கும் உள்ள பல கோடி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் என்னுடைய சிறந்த ரோல்மாடலாக இருப்பவரின் அடைமொழியை வைப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி தலைவா” என்றார்.