நாய்க்கறிக்கு தடை… நாகா மக்களின் உரிமையில் தலையிடாதீர்கள் என்று எதிர்ப்பு!

 

நாய்க்கறிக்கு தடை… நாகா மக்களின் உரிமையில் தலையிடாதீர்கள் என்று எதிர்ப்பு!

நாகாலாந்தில் நாய்க்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு நாகாலாந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாய்க்கறிக்கு தடை… நாகா மக்களின் உரிமையில் தலையிடாதீர்கள் என்று எதிர்ப்பு!இந்தியாவில் மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பழங்குடியின பிரிவினர்கள் சிலர் நாய்க்கறி சாப்பிடுவது வழக்கம். அதே நேரத்தில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் கடத்தப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவதாக புகார்கள் வந்துகொண்டே இருந்தது. மேலும் நாகாலாந்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் நாய்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நாகாலாந்தில் நாய் இறைச்சி விற்பனை செய்ய, தடை விதிப்பதாக அரசு தெரிவித்தது.

நாய்க்கறிக்கு தடை… நாகா மக்களின் உரிமையில் தலையிடாதீர்கள் என்று எதிர்ப்பு!இதற்கு நாகாலாந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் நடவடிக்கை ஒருவரின் பாரம்பரிய வழக்கத்தையும் உணவு உண்ணும் உரிமையையும் மீறும் செயல் என்று அவர்கள் எதிர்ப்ப தெரிவித்துள்ளனர். நாய் இறைச்சிக்கு தடை விதித்திருப்பது முட்டாள்தனமானது. மதுபானத்துக்கு தடைவிதிக்கப்பட்டபோது அது தோல்வியில் முடியும் என்று தெரிவித்தோம். அதுபோல இதுவும் தோல்வி அடையும். நாகா மக்களின் உணவு விஷயத்தில் உரிமையில் தலையிட வேண்டாம் என்கின்றனர்.