கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்களுக்கு தடை!

 

கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்களுக்கு தடை!

புரெவி புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பாதையில் இன்று இரவு முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

நிவர் புயலைத் தொடர்ந்து, தென் வங்கக்கடலில் புரெவி புயல் உருவானது. இந்த புயல் தற்போது பாம்பனுக்கு மிக அருகில் இருப்பதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புரெவி புயல் இன்று மாலை அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், பேரிடர் மீட்புக் குழுவுடன் தென் தமிழகம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறது. மழை பாதிப்பில் இருந்து மக்களை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்களுக்கு தடை!

இந்த நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் பலத்த மழை பெய்து வருவதால் இன்றிரவு 7 மணி முதல் மலைப்பாதைகளில் செல்லத் தடை விதிப்பதாக சப் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார். வத்தலக்குண்டு, பழனி, அடுக்கம் சாலைகளில் பேருந்துகள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களின் வாகனங்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்படாது என்றும் மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.