தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை : அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை : அரசாணை வெளியீடு

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்கும் தொடர்பு இருக்கும் என புகார் எழுந்த நிலையில் தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை : அரசாணை வெளியீடு

இந்நிலையில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வாய்மொழியாக காவல்துறை தலைமை அதிகாரிகள் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிக தடை என்று கூறிய நிலையில் தற்போது இது குறித்து அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை : அரசாணை வெளியீடு

முன்னதாக ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதா என பதிலளிக்க கோரி டிஜிபிக்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.