11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை – பள்ளிக் கல்வித்துறை

 

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை – பள்ளிக் கல்வித்துறை

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், கொரோனா பாதிப்பு முடிந்து நிலைமை சீரானாதால் தான் பள்ளிகள் திறக்கப்படும் என மத்திய, மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், நிகழாண்டு 10 ஆம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை – பள்ளிக் கல்வித்துறை

இந்நிலையில் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது. புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெறாமல் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. ஜூலை மூன்றாவது வாரத்தில் இருந்து, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தகவல்கள் வெளியான நிலையில் பள்ளிக்கல்வித்துறை இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.