தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலையை பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலையை பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலணி செவன்த்டே பள்ளி அருகே கடந்த 12.08.2020 அன்று தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மகன் பிருத்திவிராஜ் (வயது22) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலையை பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தூத்துக்குடி, குறிஞ்சிநகரைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் மகாராஜன்(வயது36) மற்றும் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சோலையப்பன் (வயது33) ஆகியோர் சேர்ந்து வடமாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலையை பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 1¼ டன் எடையுள்ள புகையிலை பொருட்களையும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலையை பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான மகாராஜன் என்பவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அளித்த அறிக்கை அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். இதையடுத்து, மகாராஜன் என்பவர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.