தடை செய்யப்பட்ட மாத்திரைகள்… பார்சலில் சென்னைக்கு வந்தன! இருவர் கைது

 

தடை செய்யப்பட்ட மாத்திரைகள்… பார்சலில் சென்னைக்கு வந்தன! இருவர் கைது

விமானநிலையத்தில் சோதனை இடும் முறையில் என்னவிதமான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவையும் பயன்படுத்தினாலும் கடத்தல் காரர்கள் அவற்றையும் மீறி கடத்தல் வேலையைச் செய்துகொண்டே இருக்கிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் பார்சல்களில் சிலவற்றின் மீது சந்தேகம் எழுந்துள்ளது.  அவை ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகளிலிருந்து வந்தவை. விமான நிலைய சுங்கத் துறையினர் அந்த பார்சல்களை ஆய்வு செய்ததில் தடை செய்யப்பட்ட  மாத்திரைகள் அதில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இவ்வளவு கெடுபிடிகளையும் மீறி எப்படி இதை அனுப்ப முடிந்தது என்பதே அதிர்ச்சிக்குக் காரணம்.

தடை செய்யப்பட்ட மாத்திரைகள்… பார்சலில் சென்னைக்கு வந்தன! இருவர் கைது

ஜெர்மனியில் இருந்து வந்த பார்சலில் இரண்டு பிளாஸ்டிக் உறைகளில் 100 சிவப்பு நிற மற்றும் 50 நீல நிற எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள் இருந்தன. டெஸ்லா நிறுவனத்தின் லோகோ பதிக்கப்பட்டுள்ள சிவப்புநிற மாத்திரையில் 224 மி.கி. எம்.டி.எம்.ஏ. மற்றும் EA ஸ்போர்ட்ஸ் சின்னம் பதிக்கப்பட்ட நீலநிற மாத்திரைகளில் 176 மி.கி. எம்.டி.எம்.ஏ. இருந்ததும் தெரிய வந்தது.

நெதர்லாந்திலிருந்து வந்த ஒரு பார்சலில், 100 எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள் இருந்தன.  இவை மனிதரின் மண்டை ஓடு போன்ற வடிவில் MY BRAND/ Totenkopf Skull  எனக் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதில் 248 மி.கி. அளவு எம்.டி.எம்.ஏ. இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. நெதர்லாந்தில் இருந்து வந்த மேலும் ஒரு பார்சலில் 26 எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் Jurassis எனக் குறிப்பிடப்பட்டு  டைனாசோர் படம் அச்சிடப்பட்டுள்ளது. இதில் 300 மி.கி. எம்.டி.எம்.ஏ. உள்ளது. நான்காவது பார்சலில் 7 கிராம் அளவுக்கு எம்.டி.எம்.ஏ. கிரிஸ்டல் இருப்பது தெரிய வந்தது.

மொத்தத்தில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள  276 எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள், 7 கிராம் எம்.டி.எம்.ஏ. கிரிஸ்டல் ஆகியவை மீட்கப்பட்டு என்.டி.பி.எஸ். சட்டம் 1985-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

தடை செய்யப்பட்ட மாத்திரைகள்… பார்சலில் சென்னைக்கு வந்தன! இருவர் கைது

இந்தக் கடத்தல் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒருவரும் புதுச்சேரி ஆரோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படு வருகின்றனர். புதுச்சேரி பெண் தன்னார்வலராக அந்தப் பகுதியில் பணியாற்றிக்கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத் தக்கது. மற்றொரு பார்சல் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு முகவரிக்கு வந்திருந்ததால் அது குறித்து விசாரணை சென்றுகொண்டிருக்கிறது.