கொரோனாவால் மென்பொறியாளர் பலி; மனைவியும் மகளும் 18வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு

 

கொரோனாவால் மென்பொறியாளர் பலி; மனைவியும் மகளும் 18வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த மின் பொறியாளர் ரவிராஜா, மனைவி சத்யாபாய் மற்றும் ஐந்து வயது மகளுடன் மலேசியா கோலாலம்பூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். கோலாலம்பூரில் தாமான் தெமகாசாலாக் செலத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் வசித்து வந்தனர்.

கொரோனாவால் மென்பொறியாளர் பலி; மனைவியும் மகளும் 18வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு

கொரோனா இரண்டாவது அலையில் ரவி ராஜாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். கடந்த 14ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரவிராஜா ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் 16ஆம் தேதியன்று சத்யாபாய்க்கும் அவரது 5 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து இருவரும் வீட்டிலேயே இருந்து அவதிப்பட்டு வந்துள்ளனர். கடந்த 17ஆம் தேதி கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார் சத்யாபாய். கணவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க இங்கே மகளுடன் மூச்சுத் திணறிக் கொண்டிருக்க, உதவி செய்யவும் ஆறுதல் சொல்லவும் யாரும் இல்லாத நிலையில் தமிழகத்தில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து, எங்களை கவனித்துக் கொள்ளவும் ஆளில்லை. உதவி செய்யவும் ஆளில்லை என்று பேசி கண்ணீர் வடித்திருக்கிறார் சத்யா பாய்.

கொரோனாவால் மென்பொறியாளர் பலி; மனைவியும் மகளும் 18வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு

சத்யாபாய் மன உளைச்சலில் இருப்பதை அறிந்த உறவினர்கள் அவரை தேற்றினர். ஆனாலும் அதில் நிம்மதி கொள்ளாத சத்யாபாய் தன் ஐந்து வயது மகளுடன் 18வது மாடியில் இருந்து குதித்து விட்டார். இந்த தற்கொலை சம்பவத்தில் அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே குதித்ததால் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகி உயிரிழந்து விட்டனர்.

ரவிராஜாவும் கடந்த சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.

கொரோனாவால் மென்பொறியாளர் பலி; மனைவியும் மகளும் 18வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு

கொரோனாவினால் கணவன், மனைவி ,மகள் மூன்று பேருமே உயிரிழந்திருக்கும் உறவினர்களுக்கு கிடைத்து கண்ணீர் வடித்து வருகின்றனர். ரவிராஜா கவலைக்கிடமான நிலையில் உயிர் இழந்திருக்கும் நிலையில் சத்தியபாயும் அவரது மகளும் தற்கொலை செய்து உயிரிழந்திருப்பது உறவினர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

மூன்று பேரின் அஸ்தியையாவது கொடுங்கள் இறுதி சடங்க செய்கிறோம் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக மென் பொறியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மலேசியாவில் உயிரிழந்திருப்பது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், கொரோனா பாதித்த அவரது மனைவியும் மகளும் 18வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழர்களிடையே பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.