பிரபல கார் கம்பெனி சீருடையில் ‘இலவச கார் சர்வீஸ்’ செய்வதாக நடக்கும் நூதன மோசடி -பேராசிரியரின் கார் அபேஸ்…

 

பிரபல கார் கம்பெனி சீருடையில் ‘இலவச கார் சர்வீஸ்’ செய்வதாக நடக்கும் நூதன மோசடி -பேராசிரியரின் கார் அபேஸ்…

ஒரு பெண் பேராசியையிடம் வீட்டுக்கே வந்து இலவசமாக கார் சர்வீஸ் செய்து தருகிறேன் என்று அவரின் கார் ,மற்றும் அனைத்து ஆவணங்களையும் ஒரு எம்பிஏ பட்டதாரி நூதனமாக திருடிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது .
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ஷீலா என்ற 40 வயதான பெண் அங்குள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறார் .அவர் தன்னுடைய காரில் தினமும் கல்லூரிக்கு செல்வது வழக்கம் .கடந்த திங்கள்கிழமை காலையில் ஒருவர் அவர் வீட்டுக்கு, ஒரு பிரபல கார் கம்பெனி சீருடையில் வந்து நாங்கள் உங்களுக்கு இலவசமாக உங்களின் காரை சர்வீஸ் செய்து தருகிறோம் என்று கூறினார் .

பிரபல கார் கம்பெனி சீருடையில் ‘இலவச கார் சர்வீஸ்’ செய்வதாக நடக்கும் நூதன மோசடி -பேராசிரியரின் கார் அபேஸ்…அவரின் பேச்சை நம்பிய ஷீலா அவரிடம் தன்னுடைய கார் சாவியினை கொடுத்தார் .மேலும் சில மென்பொருள் பணிக்காக உங்கள் காரின் அனைத்து ஆவணங்களையும் தருமாறு அந்த மெக்கானிக் கேட்டார் .ஷீலா அவர் கேட்டபடி எல்லா ஆவணங்களையும் கொடுத்தார் .
சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர் காரை டெஸ்ட் டிரைவ் செய்யவேண்டுமென கூறி ஷீலாவின் கார் மற்றும் அனைத்து ஆவணங்களோடு தலைமறைவானார் .நீண்ட நேரம் காரை எடுத்துக்கொண்டு போன மெக்கானிக் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த ஷீலா போலீசில் புகார் தந்தார் .போலீசார் தீவிரமாக விசாரித்து அடுத்த ஆறு மணிநேரத்துக்குள் போலி நம்பர் பிளேட்டுடன் ஷீலாவின் காரில் சுற்றி திரிந்த MBA பட்டதாரிகளான குற்றவாளிகள் தீபக் சர்மா (30) மற்றும் அவரது கூட்டாளி சைதன்யா குமார் (27) ஆகியோரை கைது செய்தனர் .இவர்கள் ஏற்கனவே ஒரு பிரபல கார் நிறுவனத்தில் வேலை செய்து மோசடி புகாரில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது .