பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இவர் தான்? – ஆளுநர் அதிரடி உத்தரவு!

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இவர் தான்? – ஆளுநர் அதிரடி உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழகங்களில் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்தார். பேராசிரியர் ஜெகநாதன் மூன்ரு ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இவர் தான்? – ஆளுநர் அதிரடி உத்தரவு!
பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இவர் தான்? – ஆளுநர் அதிரடி உத்தரவு!

பேராசிரியர் ஜெகநாதன் 39 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், வேளாண் வானிலை துறை தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். பல்கலைக்கழக கல்விக்குழு தலைவராகவும், உறுப்பினராகவும் பணியாற்றி அனுபவம் அவருக்கு இருக்கிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இவர் தான்? – ஆளுநர் அதிரடி உத்தரவு!

மேலும் 55 ஆய்வுக் கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். அதனோடு சர்வதேச கருத்தரங்குகளில் 14 ஆய்வுக்கட்டுரைகளையும், தேசிய கருத்தரங்குகளில் 7 ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்து இருக்கிறார். 7.64 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்திய அனுபவமிக்கவர்.