தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் காப்பீடு : புதிய முயற்சியில் இறங்கிய தயாரிப்பாளர் தாணு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கிக் கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரைச் சங்கத்தின் தனி அதிகாரியாகத் தமிழக அரசு நியமித்தது. ஆனால் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனி அதிகாரி நியமனத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது. அதனையடுத்து விஷால் தரப்பில் நடிகர் சங்க தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

producers

அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நிலையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்தனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக தயாரிப்பாளர் சங்க தேர்தல் கைவிடப்பட்டது.

இதனிடையே தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் காப்பீட்டு பிரீமியம் காலாவதியாகியுள்ளது. மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் அறக்கட்டளையும் முடங்கியுள்ள நிலையில் கொரோனா காலத்தில் காப்பீட்டு பிரீமியம் செலுத்துவது உறுப்பினர்களுக்கு நலனை தரும் என எண்ணிய தயாரிப்பாளர் தாணு அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் செலுத்துவது தொடர்பாக ஒரு மனுவை முன்வைத்தனர் . அந்த மனுவை நீதிபதி திரு N.சதீஷ்குமார் விசாரித்துள்ளார்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரான திரு அரவிந்த் பாண்டியன் குறுக்கிட்டு இந்த வழக்கு சம்மந்தமாக எந்த ஒரு ஆணையும் பிறப்பிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி சதீஷ்குமார் 20 ஜூலை 2020 அன்று இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார் .அதே சமயத்தில் மனுதாரர்களான தயாரிப்பாளர்கள் சங்கம், அறக்கட்டளை சார்பாக ஒரு தனி வழக்காக தொடரும்படி நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்’ என்று விளக்கமளித்துள்ளார்.

Most Popular

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...

சீன அத்துமீறலை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சகம்.. பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்?.. ராகுல் தாக்கு

கடந்த மே மாதம் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த ஜூன் 15ம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு...