ஊரடங்கை மீறி ஊரைக்கூட்டி ஊர்வலம் -மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு கூட்டி போன போலீஸ் …

 

ஊரடங்கை மீறி ஊரைக்கூட்டி ஊர்வலம் -மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு கூட்டி போன போலீஸ் …

கொரானாவை ஒழிக்க புதிதாக திருமணத்தில் 50 பேருக்கு மேல் கூடகூடாது என்று சட்டம் இயற்றியுள்ள நிலையில், அதை மீறி மக்களை கூட்டி திருமண ஊர்வலம் நடத்தியதால் புவனேஷ்வரில் கல்யாண மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரின் ,பெர்ஹாம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு திருமண ஊர்வலம் நடந்தது .ஊரடங்கை மீறி ஊரைக்கூட்டி ஊர்வலம் -மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு கூட்டி போன போலீஸ் …

இந்த ஊர்வலத்தில் இப்போது அமலிலுள்ள திருமண விதிகளை மீறி 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .மேலும் அவர்கள் யாரும் முக கவசமோ ,சமூக இடைவெளியையோ பின்பற்றவில்லை .இந்த தகவல் காவல் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது .
உடனடியாக வந்த காவல் துறையினர் தொற்று நோய் சட்டத்தினை மீறி, திருமணத்தினை நடத்தியதாக கல்யாண மாப்பிள்ளை உள்பட ஐந்து பேரை கைது செய்தனர் .மேலும் இதற்கு அனுமதியளித்த ஹோட்டலையும் பூட்டி சீல் வைத்தனர் .ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் போலீசார் கைப்பற்றி,கைது செய்யப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்

ஊரடங்கை மீறி ஊரைக்கூட்டி ஊர்வலம் -மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு கூட்டி போன போலீஸ் …
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த ஒடிஷா முதல்வர் அலுவலகம் ,கொரானா தொற்றை முற்றிலும் ஒழிக்க அரசு அரும்பாடு பட்டு வரும் நிலையில் ,மக்கள் ஒத்துழைக்காமல் இது போல நடந்து கொண்டால் கைது செய்யப்படுவது தவிர்க்க முடியாதது என்று ட்விட் செய்துள்ளது .