மறுசுழற்சி செய்யும் வகையில் மாஸ்க் வழங்க நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

 

மறுசுழற்சி செய்யும் வகையில் மாஸ்க் வழங்க நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக அரசு பல உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக இலவச ரேஷன் பொருட்கள், ரூ.1000 நிதியுதவி உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்தது. அந்த வகையில் கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் பொருளான மாஸ்க்கை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அந்த மாஸ்க் நாம் ஒரு முறை மட்டுமே அணியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை மறுசுழற்சி செய்யவும் இயலாது என கூறப்படுகிறது.

மறுசுழற்சி செய்யும் வகையில் மாஸ்க் வழங்க நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

இந்த நிலையில், மறுசுழற்சி செய்யும் வகையில் மாஸ்க் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், திருவாரூரில் பிளாஸ்மா சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார். அதனைத்தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டெல்லிக்கு அடுத்து தமிழகத்தில் அதிகம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆவதாக கூறினார்.