ஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates

 

ஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates

ஐபிஎல் என்றாலே உற்சாகம். ஐபிஎல் என்றாலே கொண்டட்டம். கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட சிறந்த பொழுதுபோக்காக மாற்றியது ஐபிஎல் போட்டிகளே.

கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு தள்ளிக்கொண்டே சென்றது. இறுதியில் நோய்த் தொற்றின் வீச்சு அதிகமாக இருந்ததால் ஐபிஎல் போட்டிகள் கைவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் பல போட்டிகள் கைவிடப்பட்டன.

ஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates

இந்த ஆண்டு கைவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிர அமீரகத்தில் செப்டம்பரில் தொடங்குகிறது. இப்போட்டித் தொடரின் இறுதிப்போட்டி நவம்பரில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி எடுப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஐபிஎல்க்காக தீவிரமாக ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் இந்த நிலையில் இரு நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டியின் முதல் வாரத்தில் கலந்துகொள்வதுல் சிக்கல் எழுந்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று டி20 போட்டிகளும், 50 ஓவர் போட்டிகள் மூன்றும் கொண்ட இந்தத் தொடர் செப்டம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 4,6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் T20 போடிகளும். செப்டம்பர் 11,13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடக்க விருக்கின்றன.

அதனால் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் உடனே கலந்துகொள்வது சாத்தியமில்லை. எனவே ஒரு வாரம் கழித்தே ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரு நாட்டு வீரர்கள் ஐபிஎல் அணிகளில் மும்பையைத் தவிர மற்ற அணிகளில் பலர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ஜோஷ் ஹசில்வுட், சாம் கரண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கேன் ரிச்சர்ட்சன், ஆரோன் பிஞ்ச், மொயின் அலி, ஜோசுவா பிலிப் ஆகிய நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இப்போது ஏற்பட்டிருக்கும் இந்தத் திடீர் சிக்கல் அந்தந்த அணிகளுக்கு பின்னடைவாகவே இருக்கும். அதனால், இன்னொரு பலன் என்னவெனில், உள்ளூர் வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும்.