ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்கள்- சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் !

 

ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்கள்- சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் !

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை கடந்த நிலையில், இப்போது வரையிலும்  வரித்தாக்கல் செய்வதிலும், செலுத்திய வரிக்கான உள்ளீட்டு வரி வரவை திரும்ப பெறுவதிலும் தொழில் நிறுவனங்கள் சிக்கலை சந்தித்து வந்தன. தற்போது புதிய சிக்கலாக கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் வருவாய் குறைந்துள்ளதால், மாநிலங்கள் வரி வரிவாய் இழப்பீட்டை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி முழுமையாக முடங்கிய நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கான அளிக்க வேண்டிய ஐஜிஎஸ்டி திரும்ப அளிப்பதில் கால தாமதம் நீடிக்கிறது.
கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சர் அறிவித்தபடி ஜிஎஸ்டி நிலுவைகள் உரியவர்களுக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்கள்- சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் !

செலுத்திய வரிகளை திரும்ப பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலரும் தொழில்முதலீடுகளை திரட்ட முடியாத நிலையில் இருந்து வந்தது. அதன் காரணமாக பணப்புழக்கம் பாதிக்கப்படுவதாக தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக புகார் அளித்து வந்தன.

உற்பத்தி வளர்ச்சி, நுகர்வு வீழ்ச்சி காரணமாக பொருளாதாரம் தத்தளித்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பல்வேறு நிதிச் சலுகை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சி மீளமுடியாத சுழலில் இருந்து வந்தது.

ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்கள்- சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் !

ஜிஎஸ்டி தாக்கல் மட்டுமல்ல, 70 சதவீத  ஐஜிஎஸ்டி தாக்கல்கள் தவறாக பதிவு செய்யப்பட்டதால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் வரியை  திரும்ப அளிப்பதில் தாமதம் நிலவுவதாக ஜிஎஸ்டி ஆணையமே குறிப்பிட்டது.

இந்த நிலையில் கொரோனா ஆரம்ப நாட்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஆர்டர்கள் கேன்சல் ஆகி பொருட்கள் திரும்ப வந்து துறைமுகங்களில் தேங்கியுள்ளதை சோதனை செய்வதிலும் தாமதம் நிலவுகிறது. இதனால் ஏற்றுமதியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப அளிப்பதில் காலதாமதம் நிலவுகிறது.

நாட்டின் ஒட்டு மொத்த வரி வருவாயில் 20 சதவீதம் வரை ஏற்றுமதி மூலம் கிடைத்து வந்த நிலையில், தற்போது அந்த வருவாய் மொத்தமாக தேங்கியுள்ளது. அதுபோல உள்நாட்டு தொழில் வளர்ச்சியும் கடந்த 5 மாதங்களில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வருவாய் கணிசமாக குறைந்துள்ளது.

ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்கள்- சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் !

ஏற்கெனவே ஜிஎஸ்டி தாக்கல் செய்வதில், மோசமான சேவை காரணமாக தொழில் நிறுவனங்கள் அதிருப்தியில் இருந்தன. வாங்கிய வரியை திருப்பி தராமல் அரசு இழுத்து அடித்து வந்தது.
இந்த நிலையில்தான் ஜிஎஸ்டி வருவாய் குறைந்து மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய பங்கினை அளிக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக வருவாய் பெற்று வந்த மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய வருவாய் இழப்பினை அளிக்க முடியாமலும் மத்திய அரசு திணறி வருகிறது.

பொருளாதார சீர்திருத்தம் என கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம், இப்படி பொருளாதாரத்தை வீழ்த்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது என்கிறார்கள் பொருளாதார ஆலோசகர்கள். மத்திய அரசுக்கே வெளிச்சம்.!

அ.ஷாலினி