புதுச்சேரிக்கு ஜெகத்ரட்சகன் முதல்வர் – திமுகவின் புது கணக்கு – கூட்டணிக்கு சிக்கலா?

 

புதுச்சேரிக்கு ஜெகத்ரட்சகன் முதல்வர் – திமுகவின் புது கணக்கு – கூட்டணிக்கு சிக்கலா?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கின்றன. திமுக காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிப்பதும், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிப்பது இதுவரை நடந்து வந்த வழக்கமாகும்.

2016 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத்திற்கான தேர்தல் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 இடங்களில் காங்கிரஸ் 21 இடங்களிலும் திமுக ஒன்பது இடங்களிலும் போட்டியிட்டன. அதில் காங்கிரஸ் 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்றது. அதனால் திமுகவின் ஆதரவு இருந்ததால் காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைக்க முடிந்தது.

புதுச்சேரிக்கு ஜெகத்ரட்சகன் முதல்வர் – திமுகவின் புது கணக்கு – கூட்டணிக்கு சிக்கலா?

இதே நிலை திமுகவுக்கு தமிழ் நாட்டிலும் ஒரு முறை நடந்திருக்கிறது 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. அந்த ஐந்து ஆண்டுகளும் காங்கிரஸ் கட்சியின் தயவால்தான் திமுக ஆட்சி அமைத்தது. திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு கோருவது அவ்வப்போது நடக்கும். ஆனால் புதுச்சேரியில் திமுக அமைச்சரவையில் இதுவரை பங்கு கேட்டதில்லை.

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு, திமுக மிக சொற்பமான இடங்களைத்தான் ஒதுக்கும் என்ற பேச்சு பல தரப்பிலும் அடிபடுகிறது. புதுச்சேரியில் திமுக தொகுதிகளை காங்கிரஸ் கட்சி மிக குறைவாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று திமுக புதிய கணக்கு ஒன்றை தொடங்கி உள்ளது.

புதுச்சேரிக்கு ஜெகத்ரட்சகன் முதல்வர் – திமுகவின் புது கணக்கு – கூட்டணிக்கு சிக்கலா?

ஜெகரட்சகனை புதுச்சேரியில் களம் இறக்கிவிட்டு புதுச்சேரியில் திமுகவுக்கும் செல்வாக்கு என்ன என்று சோதிக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் புதுச்சேரியில் திமுகவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்று ஜெகத்ரட்சகன் பேசியிருக்கிறார். மேலும், 30 தொகுதிகளிலும் நாங்கள் வெல்லுவோம் என்றும் சொல்லியிருக்கிறார். இதன்மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் முடிவுக்கு வருகிறதா என்று கேள்வி எல்லோருக்கும் எழுந்தது.

தற்போது ஜெகத்ரட்சகன் அதை மறுத்திருக்கிறார் ’நாங்கள்’ என்று சொன்னது திமுக – காங்கிரஸ் கூட்டணியைதான் என்று சமாளித்து வருகிறார். ஆனால் இது கூட்டணியில் தமிழ்நாட்டு அளவிலும் குழப்பத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. ஜெகத்ரட்சகன் புதுச்சேரியில் முதல்வராக்க திமுக நினைக்கிறதோ என்கின்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது. இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு விஷயங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கின்றன.

புதுச்சேரிக்கு ஜெகத்ரட்சகன் முதல்வர் – திமுகவின் புது கணக்கு – கூட்டணிக்கு சிக்கலா?

ஒன்று திமுக – கூட்டணி உடைந்து காங்கிரஸ் கட்சி தனியாகவோ அல்லது வேறு கூட்டணியிலேயே தேர்தலைச் சந்திக்க கூடும். இரண்டாவது காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுக கொடுக்கும் குறைவான தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு கூட்டணியில் நீடிக்க சம்மதிக்க முடிவு செய்யும். அதேபோல் புதுச்சேரியில் திமுகவுக்கு நிறைவளிக்கும் விதமாக தொகுதிகளை ஒதுக்க அது முடிவு செய்யும்.

எது நடந்தாலும் தனக்கு சாதகமே என்று நினைக்கிறது திமுக. திமுக விட்டெறிந்த இந்தக் கல்லில் மாங்காய் விழுகிறதா திரும்ப கல் மட்டும் விழுகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.