கொரோனா பரிசோதனையில் குளறுபடி- மெட் ஆல் ஆய்வக உரிமம் ரத்து

 

கொரோனா பரிசோதனையில் குளறுபடி- மெட் ஆல் ஆய்வக உரிமம் ரத்து

பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் கொரோனா பரிசோதனை உரிமத்தை ரத்து செய்து தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனையில் குளறுபடி- மெட் ஆல் ஆய்வக உரிமம் ரத்து

தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு தவறாக கொரோனா இருப்பதாக கூறியதாக மெட் ஆல் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. மே 19, மே 20 தேதிகளில் ஐசிஎம்ஆரில் பதிவேற்றம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் கொரோனா பாசிடிவ் இருந்தவர்களை கள்ளக்குறிச்சியை சேர்ந்தவராக அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாக புகார் எழுந்ததையடுத்து தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தில் தொடர்ந்து நீடிப்பது குறிப்பிடதக்கது. இந்த சூழலில் கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தமிழகத்தில் சேர்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.