டெல்லிக்கு ஓடிய பாஜக எல்.முருகன்.. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்?

டெல்லிக்கு ஓடிய பாஜக எல்.முருகன்.. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டன. 130 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன. இந்த பிரதான கட்சிகளின் கூட்டணி கட்சிகள் இன்னும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை.

டெல்லிக்கு ஓடிய பாஜக எல்.முருகன்.. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்?

அந்த வகையில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருக்கிறது. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளுக்கான, வேட்பாளர்கள் உத்தேச பட்டியலுடன் இன்று காலை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லிக்கு விரைந்தார். அவருடன் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். அவர்கள் தமிழகம் திரும்பியதும், இன்று இரவு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லிக்கு ஓடிய பாஜக எல்.முருகன்.. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்?

இந்த நிலையில், வேட்பாளர் பட்டியல் நாளைக்கு தான் வெளியிடப்படும் என சி.டி.ரவி தெரிவித்திருக்கிறார். பாஜக தலைமையை டெல்லியில் சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் இந்த தகவலை கூறியிருக்கிறார். 177 பேர் கொண்ட அதிமுகவின் பட்டியலே வெளியாகிவிட்டது. 20 பேர் கொண்ட பாஜக பட்டியல் வெளியாவதற்கு இவ்வளவு தாமதம் ஏன்? என்ற கேள்வி வெகுவாக எழுந்திருக்கிறது.

டெல்லிக்கு ஓடிய பாஜக எல்.முருகன்.. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்?

ஒரு சில தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதியாகிவிட்டதாம். ஆனால், பாஜகவில் தற்போது நட்சத்திர பட்டாளமே இணைந்திருப்பதால் பெரும்பாலானோருக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக வேட்பாளர் பட்டியல் உருவாக்கப்படுகிறதாம். தமிழகத்தில் காலூன்ற பக்காவாக ஸ்கெட்ச் போட்டிருக்கும் பாஜகவுக்கு, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சில சிக்கல்கள் நீட்டிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.