5000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? : சபரிமலையில் நீடிக்கும் சிக்கல்!

5000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? : சபரிமலையில் நீடிக்கும் சிக்கல்!

சபரிமலையில் முன்பதிவு செய்வதற்கான முன்பதிவு வசதி இல்லாததால், தரிசனத்திற்கு 5000 பேரை அனுமதிப்பதில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல் வெளியாகிறது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வார நாட்களில் 2 ஆயிரம் பேரும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 3000 பேரும் தரிசனம் செய்யலாம் என பின்னர் தெரிவிக்கப்பட்டது. கார்த்திகை மாதத்தில் பொதுவாக அதிக பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வார்கள் என்பதால், கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கக்கோரி கடந்த மாதம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

5000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? : சபரிமலையில் நீடிக்கும் சிக்கல்!

வழக்கு விசாரணையின் போது, டிச.20ம் தேதியிலிருந்து 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தரிசனம் செய்வதற்கு 2 நாட்கள் முன்னர் பிசிஆர் சோதனையின் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன் படி, இன்று முதல் 5000 பக்தர்கள் சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

5000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? : சபரிமலையில் நீடிக்கும் சிக்கல்!

ஆனால், தற்போது தேவஸ்தான இணையதள பக்கத்தில் கூடுதலாக பக்தர்கள் முன்பதிவு செய்வதற்கான வசதி இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இது கூடுதல் பக்தர்கள் தரிசனத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 22ம் தேதி தான் இந்த வசதி உருவாக்கப்படும் என்பதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.