12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர். அதனால் அந்த பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர். இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தற்போது மதிப்பெண்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா வைரஸ் பாதிப்பால் திட்டமிட்ட படி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

- Advertisment -

Most Popular

தேனி: ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆன 100 கொரோனா நோயாளிகள்!

தேனியில் கொரோனாத் தொற்று அதிகாித்து வரும் நிலையில், குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. நேற்று ஒரே நாளில் 100 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் முதல் கொரோனாத் தொற்று மார்ச் மாதம்...

ஊரடங்கை மீறி ஊரைக்கூட்டி ஊர்வலம் -மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு கூட்டி போன போலீஸ் …

கொரானாவை ஒழிக்க புதிதாக திருமணத்தில் 50 பேருக்கு மேல் கூடகூடாது என்று சட்டம் இயற்றியுள்ள நிலையில், அதை மீறி மக்களை கூட்டி திருமண ஊர்வலம் நடத்தியதால் புவனேஷ்வரில் கல்யாண மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். ஒடிஷா...

என்.எல்.சி கோர விபத்தால் அதிகரிக்கும் மரணங்கள்.. பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

கடந்த 1 ஆம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே...

சென்னையில் வாண்டடாக கொரோனாவை வரவேற்கும் சென்னை மக்கள்! – காற்றில் பறந்த சமூக இடைவெளி

சென்னையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதை முறையாக மக்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னையில் பரவலாக பயணம் செய்து ஆய்வு செய்தபோது பலரும் சமூக இடைவெளியின்றி கடைகளில் குவிந்திருப்பதையும்...
Open

ttn

Close