அதிமுக கூட்டம்: தொண்டர்களின் முதல்வர் வேட்பாளர் கோஷத்தால் எழுந்த சர்ச்சை

 

அதிமுக கூட்டம்: தொண்டர்களின் முதல்வர் வேட்பாளர் கோஷத்தால் எழுந்த சர்ச்சை

சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க அவசர உயர்நிலைக்குழு கூட்ட வரவேற்பில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்துந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே எஞ்சியுள்ளன. அதனால் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக உட்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளன. திமுகவில் முதல்வராக முக ஸ்டாலின் தான் போட்டியிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதிமுகவிலோ, முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் போட்டியிடுவாரா? ஈபிஎஸ் போட்டியிடுவாரா? என்ற கேள்வி அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

அதிமுக கூட்டம்: தொண்டர்களின் முதல்வர் வேட்பாளர் கோஷத்தால் எழுந்த சர்ச்சை

இந்நிலையில் வரும் 2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில்
ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏராளமான கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஓபிஎஸ் வருகையின்போது
‘ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு’ என கோஷம் தொண்டர்கள் எழுப்பியுள்ளனர். வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ். என முழக்கமிட்டு ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் ஈபிஎஸ் வரும்போது ‘நிரந்தர முதல்வர் எடப்பாடியார்’ என தொண்டர்கள் முழங்கினர். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் தொண்டர்களின் இத்தகைய இருவேறான கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது.